Total Pageviews

Thursday, August 24, 2017

உயிர் காக்கும் சீட் பெல்ட்!

பொதுவாக கார் பயணிகள் அதாவது ஓட்டுநர் மற்றும் முன்புற பயணி கூட பல சமயங்களில் சீட் பெல்ட் அணிவதில்லை. காரில் உயிர் காக்கும் ஏர் பேக் வசதி உள்ளதே என்ற அசிரத்தை தான் இதற்குக் காரணம். ஆனால் சீட் பெல்ட் அணிந்திருந்தால் மட்டுமே ஏர் பேக் சரிவர வேலைசெய்யும்போது உயிர் காக்கப்படும்.
உலக சுகாதார மையம் இது தொடர்பாக நடத்திய ஆய்வில்கூட வாகன விபத்தில் முன்னிருக்கை பயணி மற்றும் டிரைவர் சீட் பெல்ட் அணிருந்திருந்தால் 45 சதவீதம் முதல் 50 சதவீதம் வரையிலான உயிரிழப்பை விபத்தின்போது தடுக்க உதவுவது தெரிய வந்துள்ளது. அதே போல சீட் பெல்ட் அணிவதால் மிக மோசமான காயம் அடைவது 25% வரை குறைவது தெரியவந்துள்ளது. இந்தியாவில் சீட் பெல்ட் அணிந்து பயணிப்போர் எண்ணிக்கை மிகக் குறைவு என்பது அதிர்ச்சியளிக்கும் தகவலாகும். சீட் பெல்ட் அணிவது கட்டாயம் என்றிருந்தாலும் இதை யாரும் பொருட்படுத்துவதில்லை. அதே சமயம் இதை கடுமையாக பின்பற்ற போதிய காவல்துறையினரும் இல்லாதது துரதிருஷ்டமாகும்.

பின்னிருக்கை பயணிகளுக்குக் கூட சீட் பெல்ட் அணிய வேண்டிய வசதி அளிக்கப்பட்டாலும் அதை யாருமே பொருட்படுத்துவதில்லை. விபத்து நடக்கக் கூடாது என்பதே அனைவரது விருப்பமாகும். எதிர்பாராமல் நிகழ்வதே விபத்து. உயிர் காக்கும் ஏர் பேக் இருந்தாலும் முறையாக சீட் பெல்ட் அணிந்திருந்தால் மட்டுமே அது உயிர் காக்கும் என்பதை உணர வேண்டும்.சட்டத்தினால்எதையும் கட்டாயமாக்க முடியாது. வாகனம் பயன்படுத்தும்போது நமது உயிர் மற்றும் மற்றவர்களின் உயிரை மதித்து விதிகளை கடைபிடிப்பதே சிறப்பானதாகும்.

Thanks to Tamil Hindu 

No comments:

Post a Comment

எதிர்கால வாழ்க்கைக்கான வருமானம் ! மற்றும் வருமான யோசனைகள் !

பெரும்பாலும், "நீங்கள் தூங்கும்போது பணம் சம்பாதிக்கவும்" என்ற சொற்றொடரை நீங்கள் கேள்விப் பட்டிருக்கலாம்.   பெரும் பாலான மக்களை செய...