Total Pageviews

Friday, April 17, 2015

புகைத்ததினால், உடலில் கலந்த நிகோடின் அளவைக் குறைக்க !

 

புகை பிடிப்பது உடலுக்குத் தீங்கு என்பது அனைவருக்கும் தெரியும். புகைக்கு அடிமையானவர்கள் எளிதில் அந்தப் பழக்கத்திலிருந்து விடுபடுவது மிகவும் கடினம். 

புகையிலையில் இருக்கும் மிக முக்கிய மூலப்பொருளான நிகோடின் தொடர்ந்து உடலில் செல்லும்போது ரத்த அழுத்தத்தை அதிகமாக்கும். இந்த அதிவேக ரத்த அழுத்ததைத் தாங்க முடியாமல், நுரையீரல் தன்னுடைய சுத்திகரிக்கும் வேலையைச் சரிவரச் செய்ய முடியாமல் போகும். இதனால் மூச்சுத்திணறல், ஆஸ்துமா போன்ற நோய்கள் தாக்கும் அபாயம் அதிகரிக்கும். மது அருந்தும்போது அதை உட்கொள்பவருக்கே அதிக பாதிப்பு. ஆனால், புகையால், புகைப்பவருக்கு மட்டுமல்லாமல், சுற்றி இருப்பவர்களுக்கும் அதிகப் பாதிப்பை தந்து, சுற்று சூழலுக்கும் அது தீங்கை விளைவிக்கிறது.
  
                                                                                                     
மேலும், புகைப்பிடிப்பதால், உடலில் வைட்டமின்கள் ஏ, சி சத்துக்கள் இழக்கப்படும். இந்த வைட்டமின் நம் உடலில் குறையும்போது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து எளிதில் நிரந்தர நோயாளியாக வாய்ப்பு அதிகம். புகைப் பிடிப்பதை நிறுத்தினாலும், நம் உடலில் இருந்து நிகோடினை வெளியேற்ற பல வருடங்கள் ஆகும் என்பது ஆராய்ச்சியாளர்களின் முடிவு. எனவே, ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தின் மூலம், புகைத்ததினால், உடலில் கலந்த நிகோடின் அளவைக் குறைக்கலாம். 

ப்ராக்கோலி 

இதில் வைட்டமின் சி மற்றும் பி5 அதிகமாக இருப்பதால், புகையிலையினால் குறைந்த, வைட்டமின் சி-யின் அளவை அதிகரிக்கச் செய்யும். அது மட்டுமின்றி, உடலில் கலந்துள்ள நிகோடின் அளவைக் குறைக்க இது உதவுகிறது.

ஆரஞ்சு 

பொதுவாக நோயிலிருந்து மீண்டு வந்தவர்களுக்கு ஆரஞ்சு சாறு மிகவும் நல்லது. தொடர்ந்து ஆரஞ்சு ஜூஸை குடிப்பவர்களுக்கு ஊட்டச்சத்துக்கள் அதிகரிப்பதுடன் மன அழுத்தம், சோர்வுகளை நீக்கவல்லது. இதிலிருந்தும் நமக்குத் தேவையான வைட்டமின் சி கிடைத்துவிடும். 

கேரட் 

ஒவ்வொருமுறை புகைப்பிடிக்கும் போதும் நம் உடலில் மூன்று முதல் நான்கு நாட்கள் அந்த நிகோடின் அளவு குறையாமல் தங்கி விடுகிறது. இதனால் நமது உடலின் உள் உறுப்புகள் மட்டுமில்லாமல் தோலின் தன்மையும் மாறிவிடுகிறது. கேரட்டில் இருக்கும் வைட்டமின் ஏ, சி, கே மற்றும் பி சத்துக்கள் வேகமாகச் செயல் புரிந்து உடலில் கலந்துள்ள நச்சுப்பொருளான நிகோடினை வெளியேற்றும் ஆற்றல் கொண்டதாக இருக்கிறது. 

பசலைக் கீரை 

கீரை என்றாலே சத்துதான். அதிலும் பசலைக் கீரையில் பல வைட்டமின்கள் உள்ளன. இதில் ஃபோலிக் ஆசிட் அதிகமாகக் காணப்படுகிறது. ஃபோலிக் ஆசிட், ரத்த அணுக்களை அதிகரிக்கச் செய்யும். புற்றுநோயைக் கட்டுப்படுத்தும். 

கிவி 

பார்ப்பதற்குச் சப்போட்டா பழம் போல இருக்கும் இது. எங்கும் எளிதில் கிடைக்கக்கூடியதாகவே இருக்கிறது. இந்த அதிசய பழத்தின் மூலம் உடலில் கலந்துள்ள நிகோடின் அளவை விரைவில் வெளியேற்றலாம். 

தண்ணீர் 

புகைப்பதினால் உடலில் இருந்து அதிகளவு தண்ணீர் வெளியேற்றப்படுவதால், உடலில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படும். அதிகளவு தண்ணீர் குடிப்பதின் மூலம், புகைப்பழக்கத்தை நிறுத்த உதவும். அது மட்டுமின்றி, நிகோடின் அளவைக் குறைக்கவும் உதவுகிறது. 

-தமிழ் மருத்துவம்-

No comments:

Post a Comment

திருமணம் தள்ளிப் போவதற்கு என்னென்ன காரணங்கள்?

 திருமணம் தள்ளிப் போவதற்கு என்னென்ன காரணங்கள்?   பெண்கள் 1)   பையன் நல்லா படிச்சிருக்கனும் , 2)   சொந்த வீடு இருக்கனும் , 3)   ந...