Total Pageviews

Friday, February 8, 2013

விடலைப் பருவ பிள்ளைகளை கையாள்வது எப்படி?

குழந்தை வளர்ப்பு செயல்பாட்டில், விடலைப் பருவம் என்பது ஒரு மிக முக்கியப் பருவம். 

எது சரி? மற்றும் எது தவறு? என்று ஆராய ஆரம்பிக்கும் பருவம். உடல் ரீதியாகவும், மனோரீதியாகவும் மாற்றங்களை சந்திக்கும் பருவம். இத்தகையப் பருவத்தில், பெற்றோர்-பிள்ளைகள் உறவுகளில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன.

தங்களின் பிள்ளைகள் எந்த நிலையிலும் வழிமாறி விடக்கூடாது என்பதுதான் ஒவ்வொரு பெற்றோரின் ஆசை. ஆனால், பிள்ளைகளை கையாள்வதில் அவர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். எனவே, மிக முக்கிய பருவமான விடலைப் பருவத்தில், பிள்ளைகளை எப்படி கையாள வேண்டும் என்பது தொடர்பாக சில ஆலோசனைகள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.

* உங்களின் விடலைப் பருவ பிள்ளை, என்ன சொல்ல வருகிறது என்பதை கனிவோடு கேட்கப் பழக வேண்டும். ஏனெனில், ஒரு குழந்தை சிறுவயதில் இருக்கும்போது பெற்றோர்களிடம் ஏறக்குறைய அனைத்து விஷயங்களையும் கூறிவிடும். ஆனால் அதே பிள்ளை, விடலைப் பருவத்திற்கு வந்தவுடன், பல விஷயங்களை பெற்றோரிடம் சொல்வதற்கு தயங்குகிறது. எத்தகைய விஷயங்களுக்கு நீங்கள் எப்படி உங்களின் விடலைப் பருவ பிள்ளைகளிடம் நடந்துகொள்கிறீர்கள் என்பதை அவர்கள் அனுமானித்து, அதன்படி, உங்களுடனான உறவுநிலையில் ஒரு வரைமுறையை வகுத்துக் கொள்கிறார்கள்.

* ஒவ்வொரு நாளிலும், குழந்தையுடன் செலவிடுவதற்கென்றே வீட்டில் ஒரு நேரம் வகுத்துக் கொள்வது ஒரு சிறந்த வழி. குழந்தைகள் படிக்கும்போது, நீங்கள் சிறிதுநேரம் அவர்களின் உடன் அமர்ந்து படிக்கலாம். பாடப்புத்தகம் அல்லாத சில சிறந்த புத்தகங்களை, குழந்தைகளுக்குப் படிக்க கொடுத்து, அதன் கருத்தாக்கம் பற்றி அவர்களுடன் கலந்துரையாடலாம்.அதுபோன்ற கலந்துரையாடலில், உங்களின் கருத்தை திணிப்பதை தவிர்த்து, அவர்களின் கருத்தை ஆர்வமுடன் கேளுங்கள்.

* பொதுவாக இரவு நேரத்தில் உணவருந்தும்போது, குடும்பத்தினர் ஒன்றாக அமர்ந்து உணவருந்துவது ஒரு நல்ல ஆரோக்கிய சூழல். இந்தப் பழக்கமானது, உங்களுக்கும், உங்களின் விடலைப் பிள்ளைகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும். ஏனெனில், அத்தகைய சூழலில், குழந்தைகள் தங்களின் மனதில் உள்ளதை பெற்றோரிடம் வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். ஆனால், அந்த சந்தர்ப்பத்தை, பெற்றறோர்கள் தங்களின் கருத்துக்களை திணிப்பதற்கான போதனைக் களமாக ஆக்கிவிடக்கூடாது. பிள்ளைகளைப் பேசவிட வேண்டும்.

* வெறுமனே அமர்ந்து கொண்டு ஏதாவது பேசிக் கொண்டிருப்பதைக் காட்டிலும், ஏதேனும் ஒரு வேலையை நீங்களும், உங்களின் விடலைப் பருவ பிள்ளையும் இணைந்து செய்து கொண்டே பேசலாம். வீட்டை சரிப்படுத்துதல், வெளியில் கடைக்கு செல்லுதல் போன்ற பணிகளை செய்துகொண்டே பிள்ளைகளுடன் கலந்துரையாடுவது, சூழ்நிலையை எளிதாக்கும்.

* பல ஆய்வு முடிவுகளின்படி, ஒரு வீட்டில் தந்தையைவிட, தாய்தான் குழந்தைகள் தங்களின் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள அதிகளவில் துணைபுரிகிறார். தந்தை ஒரு அதிகார மற்றும் கட்டளை மையமாகவே பார்க்கப்படுகிறார். ஆனால் தற்போதைய சூழ்நிலைகளில், பல தந்தைகளும் தங்களின் பிள்ளைகளிடம் நெருங்கி வருகிறார்கள்.

* சில விடலைப் பிள்ளைகளிடம் ஒரு வேலையை செய்யச் சொன்னால், அவர்கள், அதற்கு முற்றிலும் எதிர்பதமாகவே செய்வார்கள். ஏனெனில், அவர்களின் அதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக அவர்கள் இதைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த நிலையில்தான், பெற்றோர்கள் தெளிவாக செயல்பட வேண்டும். உங்களின் முடிவுகளை பிள்ளைகளின் மீது திணிக்காமல், அவர்களுடன் ஆலோசித்தே எந்த திட்டமிடுதலையும் மேற்கொள்ள வேண்டும்.
இதுபோன்ற செயல்பாடுகள் குழந்தைகளின் சிந்தனையை முதிர்ச்சியானதாக மாற்றும்.

* தொடர்ச்சியான மற்றும் பின்வருபவைகள் பற்றி சிந்திக்கும் மூளையின் பகுதியானது, விடலைப் பருவத்தில்தான் வளர்ச்சியடைகிறது. விடலைப் பிள்ளைகளுக்கு, சரியான வழிகாட்டுதலை வழங்குவதன் மூலம், தங்களின் புதுமையான செயல்களின் மூலம் நம்மை அவர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்த்துவார்கள்.

* உங்களின் விடலைப் பிள்ளையை எப்படி வழிநடத்துவது என்பதில் உங்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்தால், உங்கள் பிள்ளையின் முன்பாக வெளிப்படையாக நீங்கள் விவாதம் செய்ய வேண்டாம்.

* பல இல்லங்களில், பெற்றோரிடையே, தாங்கள் சொல்வதைத்தான் தங்களின் பிள்ளை கேட்க வேண்டும் என்ற ஒரு பிடிவாதம் இருக்கும். இதை வெளிப்படையாக காட்டிக் கொள்வதால், அவர்கள் இந்த சூழலை எதிர்மறையாக கையாள நினைப்பார்கள்.

* தாயும்-தந்தையும், ஒருவரின் அக்கறையில் மற்றொருவர் நம்பிக்கை வைக்க வேண்டும். உங்கள் குழந்தையின் முன்பாக நீங்கள் ஒற்றுமையுணர்வு மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாட்டு மனப்பான்மையுடன் நடந்துகொள்ள வேண்டும். இதன்மூலம், உங்களின் விடலைப் பிள்ளையுடனான உங்களின் உறவு வலுப்படும்.

* என்னதான் உங்களின் அரவணைப்பிலேயே உங்களின் குழந்தை வளர்ந்திருந்தாலும், அவர்கள் விடலைப் பருவத்தை எட்டியவுடன், தாங்கள் பெரிய மனிதர்கள் என்பதை உணர்கிறார்கள். எனவே அவர்களின் தனிமை உணர்வுக்கு பெற்றோர்கள் மதிப்பு கொடுக்க வேண்டும். எல்லா விஷயத்திலும் முன்னுரிமை எடுத்துக்கொண்டு, தலையிட்டு, அவர்களை சங்கடப்படுத்தக்கூடாது. தேவையான உதவிகளை தவறாமல் செய்ய வேண்டும். அதேசமயம், அவர்களுக்கு தெரியாத வண்ணம் சரியான முறையில் கண்காணிக்கவும் வேண்டும்.

Thanks to Dinamalar.com

No comments:

Post a Comment

திருமணம் தள்ளிப் போவதற்கு என்னென்ன காரணங்கள்?

 திருமணம் தள்ளிப் போவதற்கு என்னென்ன காரணங்கள்?   பெண்கள் 1)   பையன் நல்லா படிச்சிருக்கனும் , 2)   சொந்த வீடு இருக்கனும் , 3)   ந...